சாட் நாட்டில் ராணுவ தளம் மீது தாக்குதல் 40 வீரர்கள் பலி

செனகல்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் குடியரசுக்கு கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மஹமத் இட்ரிஸ் டெபி இட்னோ வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். 200க்கும் மேற்பட்ட குழுக்கள் வசிக்கும் சாட் குடியரசில் பல தசாப்தங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாட் குடியரசின் ராணுவ தளம் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

The post சாட் நாட்டில் ராணுவ தளம் மீது தாக்குதல் 40 வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: