தேவையானவை:
பூசணிக்காய் – ½ கிலோ,
சுண்ணாம்பு – 1 துளி,
சர்க்கரை – 1 கப்,
எல்லோ ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
கொப்பரைத் துருவல் (விருப்பமான நிறத்தில்) – ஒரு கப்.
செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி சின்னத் துண்டுகளாக நறுக்கவும். சுண்ணாம்பை நீரில் கரைத்து பூசணித் துண்டுகள் மேல் தடவி 5 நிமிடம் ஊறவைக்கவும். போர்க்கின் உதவியால் பூசணித் துண்டுகளில் லேசாக ஆங்காங்கே குத்தி விடவும். அப்பொழுதுதான் சர்க்கரைப் பாகு உள்ளேயும் சேர்ந்து சுவை தரும். பிறகு பூசணித் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். ஒரு வாணலியில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒன்றைக் கம்பிப் பதத்தில் பாகு வைத்து, பூசணித் துண்டுகளை அதில் போடவும். அதிகமான தீயில் வைத்து மேலும் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு எல்லோ ஃபுட்கலர் சேர்த்து, இறக்கி ஆறவிடவும். பூசணித் துண்டுகளை சர்க்கரைப் பாகில் இருந்து நன்றாக வடித்து எடுத்து, கொப்பரைத் துருவலில் புரட்டி எடுத்து பிறகு பரிமாறவும். சுவையான பம்ப்கின் மீட்டா ரெடி.
The post பம்ப்கின் மீட்டா appeared first on Dinakaran.