சிவப்பு மஞ்சள் நிறத்தில் எங்கள் கொடியை எடுத்தோம், அதையே விஜய்யும் வைத்திருக்கிறார். நாங்கள் புலி வைத்திருக்கிறோம், அவர் யானையை வைத்திருக்கிறார். இதுவரை வந்த கட்சிகளுக்கு திராவிட அடையாளமாக கருப்பு சிவப்பு இருந்தது. இப்போது, சிவப்பு மஞ்சளாக மாறியிருக்கிறது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா எனக் கேட்கிறீர்கள். அவர் இப்போதுதான் கருத்தரித்து இருக்கிறார். பெண் பிள்ளைதான் பிறக்கும்; ஆண் பிள்ளைதான் பிறக்கும் என இப்போதே சொல்வது போல் இருக்கிறது.
பிறப்பொக்கும் என நான் முதலில் கொண்டு வந்ததை, விஜய்யும் எடுத்து செய்வது மகிழ்ச்சி. நான் பேசவில்லை என்றால் சுந்தரலிங்கனாரும், வேலு நாச்சியாரும் இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்குமா? அதுதான் முக்கியம். நாங்கள் அரசியலுக்கு வரும்போது இவ்வளவு ஆதரவு இல்லை. திரைப்புகழ் இருக்கும்போது வீச்சும், ரீச்சும் அதிகம். ஆனால் எங்களுக்கெல்லாம் அப்படி இல்லை. கடைசி வரைக்கும் தமிழர்கள் நாங்கள் அனாதையாக இருக்க வேண்டியிருக்கிறது.
விஜய் கட்சியின் மாநாடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். நாம் தமிழர் மற்றும் தவெகவின் கூட்டணி, கொள்கை கூட்டணியாக அமையுமா என்பது குறித்து, விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மதுரையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சீமான் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய்யின் கொள்கை எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. அவரது கொள்கைளும் எங்கள் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறானது. நான் ஏற்கனவே தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டேன். யாருடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார்.
The post தவெக – நாதக கூட்டணியா? இப்போதுதான் கருத்தரித்து இருக்காரு… குழந்தைக்கு வெயிட் பண்ணுங்க…சீமான் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.