தேசிய எறிபந்து போட்டியில் ராஜபாளையம் மாணவி சாதனை

ராஜபாளையம்: தேசிய எறிபந்து போட்டியில் ராஜபாளையம் மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஹைதராபாத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 34வது ஜூனியர் தேசிய எறிபந்து போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு எறிபந்து அணி சார்பில் விளையாடிய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஏகேடிஆர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி அபிநயா வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். இந்த வெற்றி மூலம் மாணவி அபிநயா தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் கிருஷ்ணமராஜு, தலைமையாசிரியை, உடற்கல்வி ஆசிரியை ஆகியோர் பாராட்டினர்.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான தாங்-டா தேர்வு ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி பிந்துஜா கலந்து கொண்டு தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார். டிச.3வது வாரம் டெல்லியில் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

The post தேசிய எறிபந்து போட்டியில் ராஜபாளையம் மாணவி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: