டெல்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் மீது தாக்குதல்: பா.ஜ மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மேற்கு விகாஷ்பூரில் நடந்த தேர்தல் பாதயாத்திரை பிரசாரத்தில், கெஜ்ரிவாலை பாஜ தொடர்புடைய ஒரு கும்பல் தாக்கியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற கெஜ்ரிவால், ஜாமீனில் வெளியே வந்ததும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடிசியை முதல்வராக்கினார். அதன்பின் அடுத்தாண்டு டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நேற்று முன்தினம் டெல்லி விகாஷ்பூரில் நடந்த பாதை யாத்திரை பிரசாரத்தில் கெஜ்ரிவாலை ஒரு கும்பல் தாக்கியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், ‘கெஜ்ரிவாலை கொல்வதற்கு தீவிரமான சதி திட்டம் தீட்டப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாஜவின் இளைஞர் பரிவு தான் காரணம். கெஜ்ரிவாலுக்கு எதாவது நடந்தால், அதற்கு பாஜ தான் பொறுப்பு’ என்று குற்றம் சாட்டினார்.

* தாக்குதல் ஆதாரம் இல்லை
கெஜ்ரிவால் தாக்கப்பட்ட புகார் குறித்து டெல்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆம் ஆத்மியிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் முறையாக கொடுக்கவில்லை. பாதை யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கும்பல் ஆம் ஆத்மிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது. ஆனால் கெஜ்ரிவாலை தாக்க முயன்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

The post டெல்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் மீது தாக்குதல்: பா.ஜ மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: