×
Saravana Stores

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அமோக விற்பனை: தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய ஆடுகள் சந்தை

தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆடுகள் சந்தையில் அதிகாலை முதலே விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருநெல்வேலி, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வெள்ளாடு, நாட்டு செம்மறி, மையில்பாடி குறும்பு வகை ஆடுகளை வாங்கி சென்றனர். வளர்ந்த ஆடுகள் ரூ.7,000 முதல் ரூ.30,000 வரை விலைக்கு வாங்கப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் கால்நடை சந்தைகளில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் ஆடுகள் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை பரபரப்பாக நடைபெற்றது. குறிஞ்சிபாடி, குள்ளச்சாவடி, தம்பி பேட்டை, பண்ருட்டி, காடம்புலியூர், கொள்ளுக்காரன் குட்டை, வடக்குத்து, மீன்சுருட்டி, மருவாய், கொளக்குடி, கம்மாபுரம், செத்துவார் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் சனிக்கிழமை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தலைவாசல் கால்நடை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அமோக விற்பனை: தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய ஆடுகள் சந்தை appeared first on Dinakaran.

Tags : Deepavali ,Tamil Nadu ,Thoothukudi ,Diwali ,Ettayapuram ,Kovilpatti ,Thoothukudi district ,Tirunelveli ,Madurai ,Trichy ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...