×
Saravana Stores

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த அக்டோபர்.3-ம் தேதி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் 2027-ல் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,K. Stalin ,Union Minister ,Manohar Lal Qatar ,Chief Minister MLA ,Metro Company ,Nandana, Chennai ,MLA ,
× RELATED திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது...