×
Saravana Stores

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே சாலையில் உலா வந்த ஒற்றை யானை

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோபு செக்போஸ்ட் அருகே யானை சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. யானை வெளியேறுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக ஒற்றை யானை இரவு நேரங்களில் மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக கருப்பு தோட்டத்திற்கு சென்று கரும்பை ருசித்து விட்டு காலையில் சுமார் ஏழு அல்லது எட்டு மணி அளவில் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் செல்கிறது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் தோட்டத்திற்கு செல்ல அச்சப்படுகின்றனர். வனத்துறையினர் தினமும் யானையை விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் இறங்கி வந்து அட்டகாசம் செய்கிறது. மழைக்காலங்களில் வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் கிடைப்பதால் யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாது என்று கூறப்படும். ஆனால் தற்போது மழை பெய்யும் நேரத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறி நடமாடுவது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. யானைகள் வெளியேறுவதை தடுக்க பாதையில் அகழிகள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் செண்பகத்தோப்பு நுழைவு வாயில் பகுதியான செக்போஸ்டில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒற்றை யானை வேகமாக சாலையை கடந்து சென்றது. இது தொடர்பாக நேற்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறை ரேஞ்சர் செல்ல மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் செக்போஸ்ட்டுக்கு மிக அருகில் வந்து சாலையை கடந்த ஒற்றை யானையால் செண்பகத்தோப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே சாலையில் உலா வந்த ஒற்றை யானை appeared first on Dinakaran.

Tags : Sri Williputhur ,Senbagatopu ,
× RELATED ரயில் பிரேக் ஷூ விழுந்து விவசாயி பலி..!!