×
Saravana Stores

அமெரிக்க அதிபர் தேர்தல் கமலா ஹாரீசை முந்துகிறார் டிரம்ப்: புதிய கருத்துக்கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபரான டிரம்ப் போட்டியிடுகின்றார். ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய தேசிய அளவிலான கருத்து கணிப்பில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் 47 சதவீத வாக்குகளை பெறக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் கமலா ஹாரிசுக்கு 45சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். கமலா ஹாரிசுக்கு 46 சதவீத வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்க அதிபர் தேர்தல் கமலா ஹாரீசை முந்துகிறார் டிரம்ப்: புதிய கருத்துக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,Kamala Harris ,US ,Washington ,Former ,President ,Republican Party ,US presidential election ,Vice President ,Democratic Party ,Wall Street Journal ,election ,Dinakaran ,
× RELATED அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: கமலா ஹாரிஸ் காட்டம்