புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் மீனவர் வலையில் 20 கிலோ கட்லா ரக மீன் சிக்கியது. புதுச்சேரி அரியாங்குப்பம், தேங்காய்திட்டு வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). மீனவரான இவர் நேற்று மாலை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தின் மீது நின்றபடி சிறிய வலையை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது 20 கிலோ கட்லா ரக மீன் சிக்கியது. இதை கையில் தூக்கியபடி சக்திவேல் வெளியே எடுத்து காண்பித்த நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதை பார்த்தபடி சென்றனர். இதுதொடர்பாக மீனவர் சக்திவேல் கூறுகையில், புதுச்சேரி மீனவர்கள் வலையில் இதுவரை 12, 13 கிலோ எடையுள்ள கட்லா மீன்கள் மட்டுமே சிக்கி உள்ளது. தற்போது தான் 20 கிலோ கட்லா ரக மீன் கிடைத்துள்ளது. சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் இவ்வளவு பெரிய அளவிலான மீன் சிக்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கட்லா ரக மீன்கள் அதிகளவில் பிடிபட்டது என்றார்.
The post நோணாங்குப்பம் பாலத்தில் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ கட்லா மீன் appeared first on Dinakaran.