கொள்ளிடம்,அக்.25:அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு சாலை பணியாளர்கள் வாழ்த்து, நன்றி தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வினை50 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக அதாவது மூன்று சதவீதம் உயர்த்தியதோடு உயர்வினை ஜூலை 1ஆம் தேதியிலிருந்து உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வினை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களை மகிழ்வித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்,நிலுவையில் உள்ள சரண் விடுப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல் காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற நிலுவை கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றி தருமாம் அலுவலகம் மற்றும் பணியாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு சாலை பணியாளர்கள் நன்றி appeared first on Dinakaran.