×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

 

கரூர், அக். 25: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் மணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தூய்மை தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தனியார் ஒப்பந்தங்களை நிறுத்தி விட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ. 30 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Adithamizhar Assembly ,Karur ,Adit Tamils Assembly ,District Secretary ,Bharti ,Head Post Office ,Dinakaran ,
× RELATED பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்...