×

செய்யாறு அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்சோவில் வாலிபர் கைது

செய்யாறு, அக்.25: செய்யாறு அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் இவரது பெற்றோர் சிறுமியை உறவினர் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி உறவினர் வீட்டில் இருந்த சிறுமி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தாய் செய்யாறு போலீசில் புகார் செய்தார். புகாரில், செய்யாறு டிஎம் ஆதிகேவசன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(24) என்பவர், எங்கள் மகளை கடத்திச்சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை, பாஸ்கரன் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமியை மீட்ட போலீசார், அவரை கடத்திச்சென்ற பாஸ்கரன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post செய்யாறு அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Bocso ,Poxo ,Seiyaru ,Tiruvannamalai district ,
× RELATED மாநில அளவிலான கால்பந்தாட்ட...