×

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

வேலூர், அக்.25: அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடியில் இன்று நடைபெற உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் குருபூைஜ விழாவைெயாட்டி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில் ரயில் மூலம் சென்ைன செல்ல இருந்த நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று மாலையே சிகிச்சை முடிந்து காட்பாடியில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். இரவு சென்னை செல்ல உள்ளதாகவும், நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர். அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Minister Durai Murugan ,Vellore ,Tamil Nadu Water Resources ,Minister Duraimurugan ,Thirumuruga Kirubananda Variyar Gurupooija festival ,Katpadi ,Minister ,Duraimurugan ,
× RELATED ஃபெஞ்சல் புயலினால் பாசன...