நன்றி குங்குமம் தோழி
வீட்டில் திடீரென்று குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தால், உடனே வீட்டில் உள்ள பெரியவர்கள் ‘வயிறு பிரச்னையாக இருக்கும். ஓமம் தண்ணீரைக் கொடு’ என்பார்கள். காலம் மாற மாற குழந்தை அழுகிறது என்றால் கிரைப்வாட்டர் கொடு என்று சொல்ல ஆரம்பித்தார்கள். வீட்டில் நம் முன்னோர்கள் கொடுத்த அதே ஓமம் தண்ணீர்தான் இப்ேபாது கிரைப்வாட்டர் என்ற பெயரில் விற்பனையில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 170 வருடமாக குழந்தைகளுக்கு கிரைப்வாட்டர் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை வீறிட்டு அழும் போது, என்னதான் அனுபவம் மிக்க பெரியவர்கள் இருந்தாலும், அதற்கான காரணம் தெரியும் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒருவித பதட்டம் ஏற்படும்.
இது போன்ற நிகழ்வுகள் பச்சிளம் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவ்வப்போது நிகழ்பவைகள் தான். பொதுவாக குழந்தை இது போல் அழ முக்கிய காரணம் வயிற்று வலி மட்டுமே. பிறந்த குழந்தைகளுக்கு செரிமான அமைப்பு முழுமையாக உருவாகாமல் இருக்கும். மேலும் தாய்ப்பால் அருந்தும் போது அவர்கள் பாலுடன் சேர்த்து காற்றையும் உறிஞ்சிடுவார்கள். அதனால் வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளை அவர்கள் அழுகை மூலம் வெளிப்படுத்துவார்கள். இதற்கு ஒரே தீர்வு கிரைப்வாட்டரினை குழந்தைகளுக்கு கொடுப்பதுதான். வாயுத் தொல்லை, வயிற்று வலிக்கான அறிகுறிகள்
*திடீரென்று குழந்தை காரணம் இல்லாமல் வீறிட்டு அழும்.
*பசி இல்லாத நேரத்திலும் அல்லது டயப்பர் மாற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லாத நேரத்திலும் குழந்தை சிணுங்கிக் கொண்டே இருக்கும்.
*குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். இதனால் முகம் சிவந்து, உடல் வெளுத்துக் காணப்படும்.
*குழந்தையின் கை, கால்கள் விறைப்பாகிவிடும். வயிறு வலியினால் முதுகை வளைத்துக் கொண்டு அழுவார்கள். இம்
மாதிரியான சமயத்தில் குழந்தையின் அழுகையை நிற்கவைக்கவும் அவர்
களின் வலியை போக்க சஞ்சீவினியாக செயல்படுவது கிரைப்வாட்டர் மட்டும்தான்.
கிரைப்வாட்டர்?
இயற்கைப் பொருட்கள் கொண்ட கலவை. இதில் விதை எண்ணெய் என்று அழைக்கப்படும் சதகுப்பை எண்ணெய், சர்ஜி காக்ஷரா போன்ற மூலப்பொருட்கள் மற்றும் குழந்தைகளின் உடலுக்கு சேரக்கூடிய சில மூலிகைகளின் கலவை. இது குழந்தையின் வயிற்றுக்கு இதமானது. மேலும் துரிதமாக வாயுத் தொல்லையை அகற்றி ஜீரண சக்தியை மேம்படுத்தும். அதனால் இதனை குழந்தைக்கு கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க தொடங்கும். குழந்தையின் வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலை செய்யும்.
கிரைப்வாட்டரின் வரலாறு
இந்தியாவில் கடந்த 170 வருடமாக கிரைப்வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலில் டிடிகே ஹெல்த் கேர் நிறுவனம் 1928ம் ஆண்டு உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தனர். 1951ம் வருடம் உட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டரை இவர்களே உற்பத்தி செய்ய தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து மேலும் வீட்டிற்குத் தேவையான பல பொருட்களையும் தயார் செய்ய ஆரம்பித்தனர். மருந்து தயாரிப்பு முறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி பல பொருட்களை தயாரித்து இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது டிடிகே நிறுவனம்.
பாதுகாப்பானதா?
உட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டரில் இருக்கும் சதகுப்பை எண்ணெய், சர்ஜிகாக்ஷரா போன்ற உட்பொருட்கள் குழந்தையின் மென்மையான வயிற்றுக்கு ஏற்றவை. ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படுவதால் வயிற்று வலி, அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மையை சமன் செய்வது போன்ற அனைத்திற்கும் ஏற்றது. ஆயுர்வேத முறையில் இதில் அனைத்து பொருட்களும் குறைந்த அளவு சேர்க்கப்பட்டு இருப்பதால், பக்கவிளைவுகள் ஏற்படாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.
The post கிரைப்வாட்டரின் 170 ஆண்டு வரலாறு! appeared first on Dinakaran.