பெரம்பலூர் அருகே சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூர், அக். 21: பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா காலை 6 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் 108 சங்கு பூஜை நடைபெற்றது. காலை 9 மணியளவில் மகாபிஷேகம் ,சங்கு அபி ஷேகம், கலச அபிஷேகம் மகா தீபாராதனை, அடியார் வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடந்தது. பின்னர் சுவாமிகளின் குருபூஜை, வெங்கனூர் விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் சன்னதி கொண்டுள்ள சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து நடந்த சொற் பொழிவு நிகழ்ச்சிக்கு, திருச்சி லிங்காயத் சமாஜ் துணைத் தலைவர் வீரபத்திரன் கண்டி தலைமை வகித்தார். பெரம்பலூர் நகர வணிகர்கள் ராமலிங்கம், ராஜமாணிக்கம், பழனிப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர் தண்டபாணி, சுவாமிகளின் வரலாறு எனும் தலைப்பிலும், சமய இலக்கிய சொற் பொழிவாளர் ராமச் சந்திரன் நால்வர் 4 மணி மாலைஎனும் தலைப்பிலும், சரவணசாமி, திருவெங்கை கலம்பகம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கை உலா உள்ளிட்ட நூல்கள் குறித்தும் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.

இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் திருக் கோயில் வார வழிபாட்டுக் குழுவினர், வீரசைவ சான்றோர்கள், தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவுக் கான ஏற்பாடுகளை திருமடத்தின் நிர்வாகி கருணை நக்கீரன் செய்திருந்தார்.

The post பெரம்பலூர் அருகே சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா appeared first on Dinakaran.

Related Stories: