வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசியில் அழைக்கலாம்

 

பெரம்பலூர், அக்.19: வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, உதவி தேவைகளுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 24மணி நேரமும் கட்டணமில்லா தொலைப் பேசியில் அழைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு, தொடர் மழையால் குடியிருப்புகளுக்கு ஏற்படும் சேதம், இடி- மின்னல் தாக்குதலால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மின் கசிவுகளால் ஏற்படும் தீ விபத்து போன்ற வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக தகவல்களை தெரிவிக்கவும், பேரிடர்கால உதவிகளுக்கும் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தின்,

கிழக்கு வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் அமைக்கப் பட்டுள்ள, பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 1800 – 425-4556 ஆகிய கட்டணமில்லா தொலைப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு அழைத்து தகவல் தெரிவித்தால், உடனடியாக மீட்புப் பணிகளுக்காகவோ, சீரமைப்பு பணிகளுக்கா கவோ, தேவையான அரசு துறையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசியில் அழைக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: