சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தச்சுத்தொழிலாளி கைது

 

ஜெயங்கொண்டம், அக்.17: ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (36) தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 9 வயதுடைய ஒரு சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று தனியே ஓரிடத்தில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அய்யப்பன் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தச்சுத்தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: