இந்த நிலையில்,99 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே,சபாநாயகர் ராகுல் நர்வேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளர்களில் 71 பேர் தற்போதைய எம்எல்ஏக்கள் ஆவர்.பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு,ராகுல் நர்வேக்கர் கொலபா,சந்திரசேகர் பவன்குலே காம்தி தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கு முன்னர் காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஜயா சவானுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.மும்பை சயான் கோலிவாடாவின் தற்போதைய எம்எல்ஏவும் தமிழருமான கேப்டன் தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
The post மகாராஷ்டிரா பேரவை தேர்தல்: பாஜ முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்எல்ஏக்கள் 71 பேருக்கு மீண்டும் வாய்ப்பு appeared first on Dinakaran.