×
Saravana Stores

வாரணாசியில் நலத்திட்டம்: ரூ.6,100 கோடியில் மோடி தொடங்கிவைப்பு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியின் எம்பியும் பிரதமருமான மோடி இன்று பிற்பகல், வாரணாசியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 870 ரூபாய் கோடி மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் புதிய முனைய கட்டடம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் ரேவா விமான நிலையம், மா மகாமாயா, அம்பிகாபூர் மற்றும் சர்சவா விமான நிலையம் ஆகியவற்றில் 220 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடங்களையும் திறந்து வைக்கிறார். மேலும், விளையாட்டுக்கு உயர்தர உட்கட்டமைப்பை வழங்கும் நோக்குடன், 210 கோடி ரூபாய் மதிப்பில் வாரணாசி விளையாட்டு வளாகத்தின் 2 மற்றும் 3வது கட்ட மறுவளர்ச்சிக்கான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் மட்டும் இன்று 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பதால், நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post வாரணாசியில் நலத்திட்டம்: ரூ.6,100 கோடியில் மோடி தொடங்கிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Modi ,Uttar Pradesh ,Narendra Modi ,RJ Shankara Eye Hospital ,Lal Bahadur Shastri International Airport ,
× RELATED உத்தரபிரதேசத்தில் பரபரப்பு;...