×
Saravana Stores

பாலையப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்மனைகள் ஒதுக்கீடு விண்ணப்பிக்க அழைப்பு

 

தஞ்சாவூர், அக்.19: தஞ்சாவூர் மாவட்டதில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டை, பாலையப்பட்டி (தெற்கு)-ல் உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதன்படி பாலையப்பட்டி (தெற்கு)-ல் மனைகள் காலியாக உள்ளது. மொத்தம் 19 தொழில் இந்த பாலையப்பட்டி (தெற்கு) சிட்கோ தொழிற்பேட்டையில் புதிதாக தொழில் தொடங்க, தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in < http://www.tansidco.tn.gov.in/ > என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேற்கண்ட காலி தொழிற்மனைகளை பார்வையிட விரும்புவோர் தஞ்சாவூரில் உள்ள சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் என்பவரை 9445006574 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் bmtnj@tansidco.org < mailto:bmtnj@tansidco.org > என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post பாலையப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்மனைகள் ஒதுக்கீடு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Palayapatti ,CITCO ,Thanjavur ,Tamil Nadu CITCO ,South ,Thanjavur district ,Palayapatti (South) ,Dinakaran ,
× RELATED வெள்ளனூர், மாத்தூர்...