காஷ்மீர் விவகாரத்தில் பாக்.கிற்கு ஆதரவு: சீனா பகிரங்க அறிவிப்பு

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் 370வது பிரிவை ரத்து செய்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா சார்பில் அந்த நாட்டின் பிரதமர் லீ கியாங் பங்கேற்றார். அதன்பின்னர் இஸ்லாமாபாத் பயணம் தொடர்பாக சீனா-பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையில், காஷ்மீர் பிரச்னை இடம் பெற்றுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தையும், நிலுவையில் உள்ள அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும், எந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கும் எதிர்ப்பை தெரிவிக்க இருநாடுகளும் உறுதி தெரிவித்து உள்ளன.

ஜம்மு காஷ்மீர் பிரச்னை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம், இருதரப்பு ஒத்துழைப்புக்கு இணங்க முறையாகவும், அமைதியாகவும் தீர்க்கப்பட வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஒன்றிய அரசு 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த 370 வது பிரிவை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு, சீனா நேரடி ஆதரவை வழங்கி உள்ளது. மேலும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு பாகிஸ்தானும், லடாக்கை யூனியன் பிரதேசமாக அமைப்பதற்கும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

The post காஷ்மீர் விவகாரத்தில் பாக்.கிற்கு ஆதரவு: சீனா பகிரங்க அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: