வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு: மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை: வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 20,898 காவலர்கள், பேரிடர் மீட்பு பயிற்சிகள் அதாவது வெள்ளப் பெருக்கு, புயல், மிக கனமழை காலங்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மக்களை பாதுகாப்பது, பேரிடர் நிகழ்ந்த பிறகு எவ்வாறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 136 பேரிடர் மீட்பு குழுக்களாக பிரித்து மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவல் துறை செயலாக்கம் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டறையை காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

The post வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு: மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: