தேசியக் கல்லூரியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி

 

திருச்சி, அக்.10: திருச்சி தேசியக் கல்லூரியில் மாநில அளவிலான ரோபோடிக்ஸ் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. ப்ரோபெஃலர் டெக்னாலஜி சார்பில் தமிழகம் தழுவிய பள்ளி மாணவர்களுக்கான “ரோபோடிக்ஸ் லீக் 2024’’ மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று தங்களது தொழில்நுட்பம் சார்ந்த அறிவினை பறைசாற்றினர். சிறப்பு விருந்தினராக எக்ஸெல் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் ரோட்டரி ஆளுநர் முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகம் தழுவிய அளவில் மூன்றாவது முறையாக இத்தகைய ரோபோடிக்ஸ் லீக் நடைபெற்றது. பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவினை ஏற்படுத்துவதாகவும், தொழில்நுட்ப அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் திகழ்ந்தது. கல்லூரியின் முதல்வர் முனைவர் குமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ப்ரோபலர் டெக்னாலஜிஸ் நிறுவன இயக்குநர் ஆஷிக் ரஹ்மான் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

The post தேசியக் கல்லூரியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: