ஒட்டன்சத்திரத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

 

ஒட்டன்சத்திரம், அக். 10: ஒட்டன்சத்திரத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை, நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பேருந்து நிலையம் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நகரும் படிக்கட்டுடன் கூடிய உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் கட்டும் இடத்தை நேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் பூங்கொடி. நெடுஞ்சாலை துறை டெக்னிக்கல் சிறப்பு அதிகாரி சந்திரசேகரன், மதுரை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பாளர் ரமேஷ், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், தர்மராஜ், நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, ஒன்றிய துணை தலைவர் தங்கம், வட்டாட்சியர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் (பொ) சுப்பிரமணியபிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனந்தராஜ், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குமணன், உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் முருகபிரகாஷ், இளவரசன், சாலை ஆய்வாளர் ஆண்டவன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: