×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் ஆடியது தவறில்லை: சொல்கிறார் எச்.ராஜா

திருவாரூர்: திருவாரூரில் பாஜ மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்க தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் கடந்த காலத்தில் இருந்த அதிமுக அரசு தான். மருத்துவமனையை செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டுமா, மதுரையில் அமைக்க வேண்டுமா என நீண்ட ஆலோசனைக்கு பின்னர் மதுரையில் அமைப்பது என முடிவு செய்து அதற்கான இடத்தை அதிமுக அரசு கையகப்படுத்தி கொடுக்காததால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாக துவங்கியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் தேஜ கூட்டணியை விட அதிமுக கூட்டணி ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது. அது மட்டுமின்றி 12 இடங்களில் அதிமுக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதையும் தேஜ கூட்டணி 2வது இடத்தில் வந்ததையும் நினைவில் கொண்டு தான் திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்கள் என்ன கோயிலின் கருவறையிலா கிரிக்கெட் விளையாடினார்கள். கருவறையில் விளையாடினால் தான் குற்றம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் ஆடியது தவறில்லை: சொல்கிறார் எச்.ராஜா appeared first on Dinakaran.

Tags : Dikshitars ,Chidambaram Nataraja temple ,H. Raja ,Tiruvarur ,BJP State Coordinating Committee ,President ,AIIMS Hospital ,Tamil Nadu ,AIADMK government ,Sengipatti ,
× RELATED சிதம்பரம் கோயில் வளாகத்தில்...