×

கால்களாவது சுத்தமாகட்டும் அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது: தனது படத்தை மிதியடியாக போட்டவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி தரமான பதிலடி

சென்னை: சங்கிகளின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது என்றும், உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து சமத்துவ பாதையில் என்றும் அயராது நடை போடுவோம் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். கலைஞர் மீது ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் திமுக தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும், மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

திமுக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், திமுக தலைவர் ஆகியோர் வழியில் பகுத்தறிவு, சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது

The post கால்களாவது சுத்தமாகட்டும் அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது: தனது படத்தை மிதியடியாக போட்டவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி தரமான பதிலடி appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi ,CHENNAI ,Udayanidhi Stalin ,Sanghis ,Tamil Nadu ,
× RELATED முதலமைச்சர் கோப்பை விளையாட்டு துணை முதல்வர் தொடங்கி வைத்தார்