மேலும் இரு நிர்வாகிகள் சீமானுக்கு ‘டாட்டா’

விழுப்புரம்: சீமான் மீது சரமாரி குற்றம்சாட்டி கட்சியில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் விலகி உள்ளனர். ‘கட்சிக்காக கேட்கிற போதெல்லாம் கோடி கோடியாய் கொடுத்துட்டு செல்வந்தர்களாக இருந்த நாங்கள், இப்போ கூலி தொழிலாளியாக மாறிவிட்டோம். இதுபற்றி கட்சியில் உள்ளவர்கள் கேட்டால் நான் சொல்கிறதை மட்டும் தலையை ஆட்டி கொண்டு கேட்க வேண்டும். இவ்வாறு கேட்டு இருக்கிறதா இருந்தா இரு… இல்லைன்னா வெளியே போ என்று சீமான் சொல்கிறார். கட்சியில் யாரையுமே மதிப்பதில்லை. சர்வதிகாரியாக செயல்படுகிறார்’ என்பது சமீப நாட்களாக நாம் தமிழர் நிர்வாகிகளின் குமுறல். சீமான் அடாவடிதனத்தால் பல்வேறு மாவட்டங்களில் கட்சியை விட்டு நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து சீமான் மீது சரமாரி குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் விலகிய நிலையில் நேற்று காலை விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் நல்லாப்பாளையம் சுதன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கையில் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதி நாதக வரலாற்றில் இதுவரை இருந்த வேட்பாளர்கள் யாரும் தொகுதி உறவுகளே இல்லை. இந்த நிலையில், 2026 தேர்தலுக்கு இப்பொதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன?. நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ, பொருளோ அல்ல. எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம். இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 

The post மேலும் இரு நிர்வாகிகள் சீமானுக்கு ‘டாட்டா’ appeared first on Dinakaran.

Related Stories: