தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் அனைத்தும் மின்னணு மயமாக்கல் செய்யப்படும் என்றும், ெபரும்பாலும் காகிதப் பயன்பாடு குறைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இதயமாக கருதப்படும் சென்னை தலைமைச் செயலகத்தின் பெரும்பாலான கோப்புகள், கணினி வழியிலேயே உருவாக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வரும் லட்சக்கணக்கான கோப்புகளை மின்மயமாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றன. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் இருந்து தலைமைச்செயலகத்திற்கு வரக்கூடிய தாபல்கள், சம்மந்தப்பட்ட துறையால் முழுமையாக ஸ்கேன் செய்யப்படும். இந்த தபாலுக்கான ரசீது, மின்னணு வடிவில் உருவாக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை தவிர்த்து மற்ற தபால்கள் அனைத்தும் ஒவ்வொரு அரசு துறையிலும் உள்ள தபால் பிரிவிலேயே வைத்துக் கொள்ளப்படும். இந்த தபால்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு காகித வடிவில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. மாறாக கணினி வழியே மின்னணு முறையில் தபால்கள் அனுப்பப்படும். அதிகபட்சமாக காகிதப் பயன்பாட்டை குறைத்து, மின்னணுமயமாக்கல் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: