×

மருத்துவர் கார்த்திகேயன்

நன்றி குங்குமம் தோழி

‘‘உடலுக்கு குளிர்ச் சியையும், எளிதில் செரிமானத்தையும் தரக்கூடிய கஞ்சியினை வாரத்தில் மூன்று நாள் காலையில் குடிப்பதால் தேவையான சக்தி மற்றும் சுறுசுறுப்பு உடனடியாய் கிடைக்கும். சாதம் வடித்த கஞ்சியினை ரெகுலர் உணவு முறைக்குள் கொண்டுவருவது மிகமிக முக்கியம்.இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கல் வராமல் பாதுகாப்பதுடன், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கஞ்சியில் உள்ள ஸ்டார்ச் உடலில் வேகமாக அஜீரணமாகி குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும். காய்ச்சல், இருமல் போன்ற நேரங்களில் கஞ்சியில் உப்பு சேர்த்து சூடாக சாப்பிடுவது நல்லது.

கடுமையான உழைப்பை செலுத்துபவர்களுக்கும், வெயிலில நின்று வேலை செய்பவர்களுக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிற வயதானவர்களுக்கும் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கும் பண்புகள் கஞ்சிக்கு உண்டு. மாதவிடாய் பிரச்னையில் அவதிப்படும் பெண்களுக்கும் கஞ்சி நல்ல உணவாக இருப்பதுடன், கூடவே சரும ஆரோக்கியம், கூந்தலின் ஆரோக்கியத்திற்காகவும் கஞ்சியினை உணவாக எடுப்பது நல்லது.அரிசி கஞ்சி மட்டுமல்லாது பார்லி, கோதுமை, உளுந்து, கேழ்வரகு, கம்பு, கொள்ளு போன்றவற்றில் வேகவைத்து எடுக்கப்படும் கஞ்சியும் ஆரோக்கியத்திற்கு நல்லது.’’

தொகுப்பு: மருத்துவர் கார்த்திகேயன்

The post மருத்துவர் கார்த்திகேயன் appeared first on Dinakaran.

Tags : Doctor ,Karthikeyan ,
× RELATED பாடி ஸ்க்ரப்பை அடிக்கடி பயன்படுத்தலாமா?