சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7120-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனையாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், புதன்கிழமை முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியது.
வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு சவரன் உயர்ந்து ரூ. 56,880-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு மேலும் ரூ. 80 உயர்ந்து, ரூ. 56,960-க்கும், ஒரு கிராம் ரூ. 7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கமும் ரூ. 80 உயர்ந்து ரூ. 60,600-க்கும், ஒரு கிராம் ரூ. 7,575-க்கும் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக விலை மாற்றமின்றி விற்கப்பட்ட வெள்ளி, இன்று காலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 103-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.