×

கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சர்ச்சின் என்பவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் இர்பான் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலை சிதைத்து கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக 4 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இர்பான் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ரிச்சர்ட் சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை காட்டுவதற்காக போலீசார் அழைத்துச் சென்றபோது தாக்கிவிட்டு ரிச்சர்ட் காவலர் அருணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். தற்காப்புக்காக போலீசார், ரிச்சர்ட் சச்சின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரிச்சர்ட் சச்சின் காலில் காயம் அடைந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரிச்சர்ட், அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Richard Churchill ,Irfan ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை