×

போதை தடுப்புப்பிரிவு போலீஸ் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சித்தூர் தாலுகாவில் பைக் பேரணி

 

பாலக்காடு, அக். 4: சித்தூர் தாலுகாவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதைத்தடுப்புப்பிரிவு போலீசார் சார்பில் பைக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா நல்லேப்பிள்ளி, கொழிஞ்சாம்பாறை, வண்ணாமடை, கோபாலபுரம், மீனாட்சிபுரம், வண்டித்தாவளம், பட்டஞ்சேரி, தத்தமங்கலம், கொல்லங்கோடு, கோவிந்தாபுரம், நெம்மாரா ஆகிய இடங்களில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சித்தூர் சப்-டிவிஷன் போதைத்தடுப்புப்பிரிவு போலீசார் சார்பில் பைக் பேரணி மூலம், போதையால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக பைக் பேரணியை அம்பாட்டுப்பாளையம் சந்திப்பில் டி.எஸ்.பி கிருஷ்ணதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாத்யூ, சசிதரன், அருண்குமார், கேரள வியாபார விவசாயி ஏகோபண சமதி மண்டலம் தலைவர் அனீஷ்குமார், செல்வன், ஷிஜோ ஜோசப், சனோஜ், ராஜேஷ் உள்பட மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

The post போதை தடுப்புப்பிரிவு போலீஸ் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சித்தூர் தாலுகாவில் பைக் பேரணி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்