×

இரானி கோப்பை: அபிமன்யூ பதிலடி

லக்னோ: ரஞ்சி சாம்பியன் மும்பை, நடப்புச் சாம்பியன் இதர இந்திய அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை டெஸ்ட் போட்டி லக்னோவில் நடக்கிறது. மும்பை முதல் இன்னிங்ஸ் 3வது நாளான நேற்று காலை முதல் 537ரன்னில் முடிவுக்கு வந்தது. சர்பராஸ்கான் 222ரன்னுடன் களத்தில் இருந்தார். இதர இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5விக்கெட் அள்ளினார். அதனையடுதது இதர இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் அதிரடி வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9, சாய் சுதர்சன் 32, தேவதூத் படிக்கல் 16, இஷான் கிஷன் 38 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதே நேரத்தில் பொறுப்புடன் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் மட்டும் 50, 100(26வது சதம்), 150ரன் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்திய வண்ணம் இருந்தார். எனவே 3வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்திருந்தது. அந்த அணியின் அபிமன்யூ 151, துருவ் ஜூரல் 30ரன்னுடன் 4வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர். மும்பை மோகித் 2 விக்கெட் எடுத்தார்.

The post இரானி கோப்பை: அபிமன்யூ பதிலடி appeared first on Dinakaran.

Tags : Irani ,Abhimanyu ,Lucknow ,Irani Cup Test ,Ranji ,Mumbai ,Sarbaraskan ,Irani Cup ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆக்ரா...