×

மாநகர பேருந்தில் பலியானவர் உடல் அடையாளம் தெரிந்தது: உறவினர்களிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: கொரட்டூரில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பேருந்து (தடம் எண் 35) கடந்த 1ம் தேதி அயனாவரம் சயாணி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறினார். பேருந்து ஓட்டேரி மேம்பாலம் அருகே வந்த போது முதியவர் பேருந்திலேயே மயங்கி கீழே விழுந்து இறந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டது. உயிரிழந்த நபர் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் , அயனாவரம் பில்கிங்டன் சாலை பகுதியைச் சேர்ந்த சவுந்தர் (49) நேற்று ஓட்டேரி காவல் நிலையத்திற்கு வந்து , தனது தந்தையை காணவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து இறந்தவரின் புகைப்படத்தை காண்பித்த போது அது சவுந்தரின் தந்தை மாணிக்கவாசகம் (75) என்பதும், பிஎன்சி மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் என்பதும், மாரடைப்பில் பேருந்தில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சவுந்தரிடம் புகாரை பெற்று நேற்று மாணிக்கவாசகத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து போலீசார் அவரது உறவினர்களிடம் உரிய முறையில் ஒப்படைத்தனர்.

The post மாநகர பேருந்தில் பலியானவர் உடல் அடையாளம் தெரிந்தது: உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Korattur ,Broadway ,Ayanavaram Sayani ,
× RELATED பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428...