டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நீடிப்பு: குல்தீப், அக்‌ஷர் பட்டேல் தக்க வைப்பு

புதுடெல்லி: 2025 சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக மெகா ஏலம் டிசம்பரில் நடத்தப்படும் என தெரிகிறது. ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள் மற்றும் அன்கேப்ட் விதியின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன ஒரு வீரர் என 6 பேரை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த ஏலத்தொகை ரூ.120 கோடியில், 6 வீரர்களை தக்க வைத்தால் ரூ.78 கோடியை செலவிட வேண்டி இருக்கும். மீதமுள்ள ஏலத்திற்கு ரூ.42 கோடி தான் மீதமிருக்கும்.

இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்போகும் வீரர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட், ஆர்சிபி அணிக்காக வரும் சீசனில் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ரிஷப் பன்ட்டை டெல்லி தக்க வைத்துக்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தவிர அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அபிஷேக் போரல் ஆகியோரை வைக்க வைத்துக்கொள்ள இருப்பதாக அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

 

The post டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நீடிப்பு: குல்தீப், அக்‌ஷர் பட்டேல் தக்க வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: