கலப்பு இரட்டையரில் இத்தாலி இணை சாம்பியன்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் உலகின் 3ம் நிலை இணையான இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவஸோரியும், 4ம் நிலை இணையான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங்கும் மோதினர். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இத்தாலியின் எரானி-வவஸோரி முதல் செட்டை 6-4 என கைப்பற்றினர். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என கைப்பற்றி அமெரிக்க கலப்பு இரட்டையர் இணையை வீழ்த்தி, கோப்பையை வென்றனர். அவர்கள், ஆனந்த கண்ணீருடன் வெற்றி கோப்பையை கையில் ஏந்தி, ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

The post கலப்பு இரட்டையரில் இத்தாலி இணை சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: