×

சென்செக்ஸ் 1800 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1800 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் தற்போது 1832 புள்ளிகள் சரிந்து 82,434 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 550 புள்ளிகள் சரிந்து 25232 புள்ளிகளுக்கு சென்றது. ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.

The post சென்செக்ஸ் 1800 புள்ளிகளுக்கு மேல் சரிவு appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் வீழ்ச்சி!!