×

சென்னையில் இளைஞர் டெஸ்ட் இந்தியா யு-19 வெற்றி

சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணியுடன் நடந்த முதல் டெஸ்டில், இந்தியா யு-19 அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா யு-19 அணி 293 ரன் குவிக்க, இந்தியா யு-19 அணி 296 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் சூர்யவன்ஷி (13 வயது) சதம் விளாசி சாதனை படைத்தார். அடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. யு-19 அணி 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 214 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா யு-19 பந்துவீச்சில் முகமது எனான் 6 விக்கெட், பட்வர்தன் 3, ஆதித்யா சிங் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா யு-19 அணி 61.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்து வென்றது. நித்ய பாண்டியா 51, கார்த்திகேயா 35, அபிக்யான் 23, சமர்த்நாகராஜ் 19 ரன் எடுத்தனர். நிகில் குமார் 55 ரன், ஆதித்யா சிங் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. யு-19 பந்துவீச்சில் ஓ’கானார் 4, விஷ்வா ராம்குமார் 3, தாமஸ் பிரவுன் 1 விக்கெட் வீழ்த்தினர். நிகில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா யு-19 அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் சென்னையில் அக்.7ல் தொடங்குகிறது.

The post சென்னையில் இளைஞர் டெஸ்ட் இந்தியா யு-19 வெற்றி appeared first on Dinakaran.

Tags : India U-19 ,Youth Test ,Chennai ,Australia U-19 ,MA Chidambaram Stadium ,Chepakkam, ,India ,U-19 ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!