இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கி தவிக்கும் 900 இந்திய ராணுவ வீரர்கள்

ஜெருசலேம்: இஸ்ரேல்- லெபனான் மோதல் தீவிரமடைந்துள்ள பதற்றமான சூழலில், தெற்கு லெபனானில் 900 இந்திய ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் ஐநாவின் இடைக்கால படையை (ஐநாஐஎப்ஐஎல்) சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதா ஐநாஐஎப்ஐஎல் தரப்பில் நேற்று பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐநா இடைக்கால படையில் இந்தியா உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படையை திரும்பப் பெறுவதற்கும், சர்வதேச அமைதி பாதுகாப்பை மீட்டெடுக்க லெபனான் அரசுக்கு உதவவும் 1978ம் ஆண்டின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 425 மற்றும் 426ன்படி இடைக்கால படை உருவாக்கப்பட்டது.

பின்னர் 2006ம் ஆண்டு இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையேயான போருக்குப் பிறகு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701ன்படி, தெற்கு லெபனான் எல்லையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கவும், சர்ச்சைக்குரிய ப்ளூ லைன் பகுதியில் லெபனான் ராணுவத்துடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் இடைக்கால படை நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கி தவிக்கும் 900 இந்திய ராணுவ வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: