×

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; 351 நபர்களுக்கு பணி நியமன ஆணை

பெரம்பலூர், செப்.29: பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில், வேலைக்கு தேர்வு செய்யப் பட்ட 351 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத் திடும் வகையில் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து புதிய தொழிற் சாலைகள் மூலமாகவும், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், திறன் மேம்பாட்டுத்துறை, தொழில்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் வாயி லாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்ப டுத்தி அவருடைய கல்வி மற்றும்திறனுக்கேற்ப நிரந் தர வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். இதன் மூலமாக தமிழகத் தில் எண்ணற்ற இளைஞர் களும் பொது மக்களும் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்ற னர். அதனடிப் படையில், நேற்று (28ம் தேதி) சனிக்கிழமை தமிழ் நாடு மாநில ஊரக, நகர்ப் புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கலை, அறிவியல், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ,டிப்ளமோ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய தமிழகத்தின் முன்னனி நிறுவனங்கள், உள்ளுர் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 63 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களால் தேர்வு செய்யப் பட்ட 351 நபர்களுக்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பணி நியமனஆணைகளை வழங்கிப் பாராட்டினார்.

முன்னதாக வேலை வாய்ப்பு முகாமில் பங் கேற்ற தனியார்துறை நிறுவனங்களை பார்வை யிட்ட மாவட்டக் கலெக்டர் தொழில் நிறுவனங்களின் விபரங்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்க ளுக்கு வழங்கப்டும் ஊதியம், பணியின் விவரம், பணியின் பாது காப்பு மற்றும் இதர சலுகை கள் குறித்து கேட்டறிந்தார். இந்த தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வருவதற்கு ஏதுவாக பெரம் பலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலி ருந்து முகாம்நடைபெறும் இடத்திற்கு இலவச சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வசதியும், தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை யின் சிறப்பு மருத்துவ முகாம் வசதியும் ஏற்படுத் தப்பட்டிருந்தது. மேலும் அடிப்படைவசதிகள், வேலை நாடுவோர்களின் கல்வி திறனுக்கேற்ப வேலைவாய்ப்பு நிறுவனங் கள் தேர்வு செய்வதற்கான வழிகாட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அமுதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலஅலுவலர் வாசு தேவன், திறன்மேம்பாட்டு உதவி இயக்குநர் செல்வம், மாவட்ட தாட்கோ அலுவலர் கவியரசு, மகளிர் திட்ட உத வித்திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; 351 நபர்களுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District Collector ,Grace Bachau ,Tamil Nadu ,State ,Rural ,Urban ,Livelihood ,Movement ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு