×

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

 

பந்தலூர்,செப்.28: நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி,துணை தலைவர் நாகராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் கனேசன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் லதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் 131 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

The post மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Tamil Nadu Government School Education Department ,Bandalur Government Higher Secondary School ,Nilgiri district ,Headmaster ,Mohan ,MLA ,Dravidamani ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே பரபரப்பு குட்டி யானை...