ஆண்டலாம்பேட்டை கிராமத்தில் தரமான விதை உற்பத்தி விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி

 

கும்பகோணம், செப். 28: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டாரம், ஆண்டலாம்பேட்டை கிராமத்தில் விதை பண்ணை அமைத்துள்ள விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி செய்வதற்கு உண்டான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. திருவிடைமருதூர் வட்டார உதவி விதை அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ராஜதுரை முன்னிலை வகித்து ஒன்றிய, மாநில அரசின் மானிய திட்டங்கள், வேளாண்மை இடுபொருள் இருப்பு விவரங்கள் பற்றி விளக்கினார்.

தஞ்சாவூர் விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்றுத்துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் விதை பண்ணை விவசாயிகளுக்கு விதை உற்பத்தியை அதிகப்படுத்த விதை முதல் அறுவடை வரை உண்டான தொழிற்நுட்பங்களை விளக்கி கூறினார். தொடர்ந்து விதை சான்று அலுவலர் செல்வமணி பேசுகையில், விதை நேர்த்தி செய்தல், களவன் நீக்குதல், மற்றும் அங்க சான்றளிப்பு முக்கியத்துவம் பற்றி கூறினார். இதில் திருவிடைமருதூர் வட்டார விதைப்பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் உதவி விதை அலுவலர் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர்கள் பாலமுருகன் மற்றும் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

The post ஆண்டலாம்பேட்டை கிராமத்தில் தரமான விதை உற்பத்தி விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: