×

பெரம்பலூரில் நூல்கள் திறனாய்வு கூட்டம்

 

பெரம்பலூர், செப். 28: பெரம்பலூரில் நூல்கள் திறனாய்வு கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் பாவாணர் நூலகத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் தலைவர் பாளைசெல்வம் தலைமையில் நூல்கள் திறனாய்வுக் கூட்டம் நடை பெற்றது. பாவலர் இராமர் – வாழையூர் குணாவின் படைப்புகள் – ஓர் ஆய்வு எனும் தலைப்பிலும், வழக்குரைஞர் தமிழகன் – களுகங்கை முதல் காவிரி வரை – என்னும் தன்னுடைய நூல் குறித்தும் சிறப்புரை ஆற்றினர். முத்துசாமி, வழக்குரைஞர் சங்கர், வாழையூர் குணா, அறிவழ கன், காப்பியன், தாழை கவிஞர் அங்கமுத்து, இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

The post பெரம்பலூரில் நூல்கள் திறனாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur Bawanar ,Library ,Tamil Nadu Arts and Literature Peru Forum ,Balaiselvam ,Bhawal Ramar ,Vazaiyur… ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு