×

மக்காச்சோளம் பயிரிட்டு காப்பீடு செய்த டி.களத்தூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்

 

பாடாலூர், செப்.28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமூகத் தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தர்மராஜ் தலைமை வகித்தார். இதில் 2023-2024-ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதில் சமூக தணிக்கை அலுவலர் வெங்கடாஜலபதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிராஜன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சமூக தணிக்கை வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

The post மக்காச்சோளம் பயிரிட்டு காப்பீடு செய்த டி.களத்தூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : D. Kalathur ,Padalur ,Aladhur taluk ,Perambalur district ,Panchayat council ,president ,Parimala ,Dinakaran ,
× RELATED தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு