×

சிதிலமடைந்து கிடக்கும் நெடுவாசல் சாலை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர், செப். 27: சிதிலமடைந்து கிடக்கும் நெடுவாசல் சாலை சீரமைக்கப்படுமா…? பொது மக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது நெடுவாசல் கிராமம். பெரம்பலூர் மூன்றுரோடு பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ் ஊரைச் சேர்ந்த பொது மக்கள், மாவட்ட தலைநகர் பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கும், தாலுக்கா, ஒன்றிய அலுவலகங்களுக்கும், இதரஅரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும், வர்த்தகரீதியாக இன்னபிற தேவைகளுக்கும் வந்து செல்ல துறைமங்கலம் ஏரி கடகால் பகுதியில் இருந்து நகராட்சியின் பாதாள சாக்கடைக் கழிவுநீர் சுத்தி கரிக்கும் மையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஒருவழிப்பாதையை தான் பயன்படுத்தி வருகின்ற னர்.

இந்த சாலையை கல்பாடி, க.எறையூர் மற்றும் கவுல் பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் கல் குவாரிகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் பயன் படுத்துவதால் சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. இதனால் தற்போது தார் சாலை என்பதற்கான அடையாளமே இல்லாத படிக்கு, பெயர்ந்து, துர்ந்து போன இந்த சாலை மழைக் காலங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதோடு, அடிக்கடி நிகழ்ந்து வரும் விபத்துகளால் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதே வழித் தடத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி வாகனங்களும் மிகுந்த அச்சத்துடனையே சென்று வருகிறது.

இவைகள் தவிர விவசாயிகள் தங்கள் வேளாண் உப கரணங்களை இடு பொருட்களை இந்த சாலையைப் பயன் படுத்தித்தான் வயல்களுக்கு கொண்டு செல்கின்றனர். நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலை சிதிலமடைந்து கிடப்பது, பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகுந்த வேதனையை தருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் அக்கறை செலுத்தி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெடுவாசல் சொல்லுகின்ற இந்த சாலையை பருவ மழைக்கு முன்பாக, போர்க் கால அடிப்படையில் சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் இருசக்கர வாகன ஓட்டி களும் மாவட்ட ஒன்றிய நிர்வாகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சிதிலமடைந்து கிடக்கும் நெடுவாசல் சாலை சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Neduvasal road ,Perambalur ,Neduvasal ,Neduvasal Village ,Kalpadi Panchayat ,Perambalur District ,Perambalur Tamrurod ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு