×

கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை,செப்.27: மயிலாடுதுறை மாவட்டம் மணர்மேட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மணல்மேட்டில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 8 ¼ அaடி உயரத்தில் கலைஞரின் வெண்கல உருவ சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாரின் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறக்க வைக்க நேற்று வந்தார்.

மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட செயலாளர் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் மயிலாடுதுறை நகர செயலாளர் குண்டா மணி என்கிற செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். வானவேடிக்கையுடன், பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Karunanidhi ,Mayiladuthurai ,Manarmet ,Mayiladuthurai district ,Mayiladuthurai DMK North Union ,chief minister ,Dinakaran ,
× RELATED கோவையில் திமுக முன்னாள் எம்.பி....