* சென்னை டெஸ்டில் சதம் விளாசிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 731 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
* இங்கிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோத உள்ள பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), ஆமிர் ஜமால், அப்துல்லா ஷபிக், அப்ரார் அகமது, பாபர் ஆஸம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் ஆஹா, சர்பராஸ் அகமது, ஷாகீன் ஷா அப்ரிடி.
* ஹாங்ஸோ டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் – விஜய் சுந்தர் இணை 4-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிரான்ட்ஸன் – ஜெபென்ஸ் ஜோடியை வீழ்த்தி தங்களின் முதலாவது ஏடிபி டூர் பட்டத்தை கைப்பற்றியது.
* உற்சாகம்… ஒய்யாரம்!
சவுதி அரேபியா சுற்றுலாத் துறை சார்பில் ‘ஸ்பெக்டாகுலர் சவுதி’ என்ற தலைப்பிலான 8 நாள் நிகழ்ச்சி மும்பை, பந்த்ரா குர்லா வளாகத்தின் R2 மைதானத்தில் நேற்று தொடங்கியது. சவுதிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் 48 மணி நேரத்தில் ‘பாஸ்ட்-டிராக்’ விசா பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் அணிவகுத்த நட்சத்திர வீராங்கனைகள் சானியா மிர்சா (டென்னிஸ்), பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் (பேட்மின்டன்).
* மக்காவ் ஓபன் ஒசாகா வெற்றி
சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பேட்மின்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இத்தாலியின் லுசியா புரோன்செட்டி (25 வயது, 77வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா (வயது 26, 73வது ரேங்க்) 6-3, 6-2 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.