திருவெறும்பூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

 

திருவெறும்பூர், செப்.25: திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலை துறையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவெறும்பூர் அருகே உள்ள பூலாம்பட்டி காலனி திருவெறும்பூர் எச்இபிஎப் தொழிற்சாலை சாலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றுவதற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று காலை ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் முத்தலீப் என்பவர் வைத்துள்ள கடை சாலையை ஆக்கிரமித்த்து உள்ளதாக கூறி அதனை அகற்ற ஜேசிபி இந்திரத்துடன் முற்பட்டனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நவல்பட்டு போலீசார் மற்றும் திருவெறும்பூர் வருவாய் துறையில் பொதுமக்களிடமும் நெடுஞ்சாலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள 15 நாள் அவகாசம் கொடுப்பதாகவும், அதற்குள் சம்பந்தப்பட்ட சாலையில் ஆக்கிரமித்தவர்கள் தங்களது கடை மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பூலா முடி காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவெறும்பூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: