×

மொபட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது

பண்ருட்டி, செப். 24: கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, காடாம்புலியூர் காவல் நிலைய எஸ்ஐ பிரேம்குமார் மற்றும் போலீசார் தீவிர மது வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். காடாம்புலியூர் அடுத்த மாளிகம்பட்டு பகுதியில் சென்றபோது, மாளிக்கம்பட்டு அம்மன் கோயில் தெரு பெருமாள் மகன் பத்மநாபன் (45) மொபட்டில் அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்த மதுபாட்டில்கள், விற்ற பணத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், பத்மநாபனை கைது செய்தனர்.

The post மொபட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Panruti ,Cuddalore district ,Panrutti taluka ,Kadampuliyur police station ,SI Premkumar ,Malikamptu ,Kadampuliyur ,Padmanapan ,Perumal ,Amman Koil Street ,Malikamputtu ,
× RELATED பெஞ்சல் புயல் மற்றும்...